ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]
