பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]
