சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பிறகு […]
