நீண்ட நாளுக்குப் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார். தமிழ் சினிமாவில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்திக் “தீ இவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிந்துபாத் படத்தை தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் டி.எம்.ஜெயமுருகன் “தீ இவன்” படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் தற்போது இருக்கும் நவீன காலம் கிராம பண்பாடு, நாகரீகம், உறவு ஆகியவை மறைந்து வருகிறது. அவைகளை […]
