கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின் பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். […]
