உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]
