ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர். எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் […]
