கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி வந்தன. போதுமான இடவசதி இல்லாததாலும், பேருந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் கஷ்டமாக இருந்தாலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். அதனால் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என மாநகர போக்குவரத்து […]
