கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் […]
