பேருந்தில் இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
