Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்…. பேருந்து நிறுத்தத்தில் கோர விபத்து…. பரிதாபமாக பலியான குழந்தைகள்…!!!

இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பயங்கரம்…. பேருந்து நிலையத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்… மூவர் பலி…!!!

ஜெருசலேமில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் மூவர் உயிரிழந்ததோடு, ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பின் நடந்தே தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவ்வளவு கூட்டத்தோட என்னால பஸ் ஓட்ட முடியல”…. நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள். அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட வந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. திருவாரூரில் சோகம்….!!

பேருந்து நிறுத்த கட்டிடத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் கிராமத்தில் விஜய்அரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விஜய்அரசன் தன் கிராமத்திற்கு வந்தார். இதனையடுத்து விஜய்அரசன் பட்டுக்கோட்டையில் உள்ள தனது ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு கடந்த 3-ஆம் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது கீழதிருபாலக்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம் – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2.30க்கு மேல் கோயம்பேட்டில் பேருந்துகள் இயங்காது …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் […]

Categories

Tech |