கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் இருந்து பெங்களூரு வரை சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த பேருந்தில் 32 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 4ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹிரியூர் தாலுக்காவை அடுத்த இடத்தில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே தீ விபத்து ஏற்பட காரணம் […]
