அரசு பேருந்து மோதி கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் முனியாண்டி(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் அருத்துவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை காவல்காத்துவிட்டு மீண்டும் அதிகாலையில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ராமநாதபுரகுதில் இருந்து நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக முனியாண்டி மீது மோதியுள்ளது. […]
