பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்களில் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு போராட்டம் நடத்தினர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பேருந்து, டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நடைமுறையே மே 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. […]
