சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. பணியின்போது குடித்து […]
