பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் ஜெயக்குமார்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனுஷ்கா(9) என்ற மகளும், ராகேஷ்(2) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 […]
