தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலியானதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள செங்குளம் கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செங்குளத்தில் இருந்து மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டனை அருகே உள்ள வருசநாடு-தேனி சாலையில் சென்ற போது […]
