கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் பயணம் மேற்கொள்ள போதிய பேருந்து வசதி இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் திடீரென […]
