குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]
