தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், […]
