பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகளை கங்கைகொண்டான் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே தாஸ் அவர்களைப் பார்ப்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் அருகே பேருந்தில் இருந்து […]
