கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், உதவி தீயணைப்பு அலுவலர் […]
