கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார். […]
