மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று முந்தினம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து […]
