தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]
