ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், […]
