யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் இவர் சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
