பேத்தியை மீட்டுத்தர கோரி பாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டி ஒருவர் தனது மகள் மற்றும் பேரனுடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது பேத்தியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு மங்களமேடு காவல் […]
