திண்டுக்கல்லில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இசைக் கலைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ் என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருக்கு வசந்த் என்ற மகன் இருந்தார். வசந்த், ஹரிஷ் ஆகிய இருவரும் பேண்ட் இசைக்குழுவில் இசைக் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலக்கோட்டை பகுதிக்கு […]
