துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னை செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பிய பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தார். இன்று காலையில் தேனி நாகலாபுரத்தில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தார். எனவே ஓபிஎஸ் ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை?என்று அனைவர் மனதிலும் எழுந்து வந்த கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி […]
