புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் […]
