மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. […]
