பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி […]
