அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் படி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் கடை நடத்துபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் சுகாதார அதிகாரிகள் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு பேக்கரி கடையில் […]
