தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் கார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திபன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திபன் பணம் வாங்குவதற்காக ஈரோடு சென்று வருகிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். இதனையடுத்து கார்த்திபன் […]
