ரஷ்ய நாட்டின் பெல்கொரோட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 குடியிருப்புகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 5 மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் படையினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அந்த மாகாணத்தின் கவர்னரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பெல்கொரோட் நகரத்தில் 11 […]
