பெலாரஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]
