திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். […]
