வீட்டு எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கு ரமேஷ்(29) என்ற மகன் உள்ளார். லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த வனிதா(22) என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு வனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 23ஆம் தேதி ரமேஷ் மற்றும் […]
