பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் […]
