சிறுவன் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (5 ). இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் யஷ்வந்த் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் சிறுவன் தெரியாமல் கால்வாயில் விழுந்த போது மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே […]
