சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது […]
