பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து சங்கேந்தி, தோலி, பின்னத்தூர், தேவதானம், செந்தாமரைக்கண் வழியாக அரசு பேருந்துகள் சென்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த 10 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயங்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு […]
