ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. […]
