சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு 3 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த தங்கவேல், அவருடைய மனைவி […]
