பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி கொடுமை, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன், சமூக சீர்திருத்தவாதி, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு. “கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது பகுத்தறிவு. உண்மையான பகுத்தறிவாதிக்கு மனிதரைத் தவிர வேறு எந்த பற்றும் இருக்கவும் […]
