குடும்ப நல வழக்குகளை தொடர்ந்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடத்த வலியுறுத்தி வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மூத்த வக்கீல் ஞானகுருசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெறும் குடும்பநல வழக்குகளை தேனி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மேலும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரியகுளம் நீதிமன்றம் முன்பு வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற வேலை […]
