தேனி மாவட்டத்தில் தந்தை மகன் இணைந்து திமுக நிர்வாகியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரை சேந்த காளிதாஸ்(52) மற்றும் அவரது மகன் தினேஷ்குமார்(30) ஆகிய இருவரும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை […]
