அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா தென்கரை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் சிவபாலன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகர் அவர் தலைமை தங்கியுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குமார், […]
