பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு மக்களுக்கு திமுக. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி வறண்ட வெள்ளாறுபடுகையில் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு பணிகளை தொடர்ந்தது. இதனால் அதை கண்டிக்கும் வகையிலும் எதிர் வரும் தேர்தலை புறக்கணிக்கும் வகையிலும் வாக்காளர் அடையாளஅட்டையை லெப்பைக் குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டமானது நடத்தப்படும் என நீர்ஆதார பாதுகாப்பு குழு எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னதாகவே அறிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று […]
